பொது செய்தி

தமிழ்நாடு

பறிபோகும் அதிகாரம்: பதவி உயர்வை ஏற்காத பி.டி.ஓ.க்கள்

Added : டிச 02, 2019
Advertisement

தேனி:பதவி உயர்வை ஏற்காத பி.டி.ஓ.க்களால் முன்னுரிமை பாதிக்கப்படுவதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் புலம்புகின்றனர்.
ஊரக வளர்ச்சி துறையில் பி.டி.ஓ.க்களாக 3முதல் 5 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும். பதவி உயர்வில் உதவி திட்ட அலுவலர், சிறுசேமிப்பு, சத்துணவு, வளர்ச்சி பிரிவுகளில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
மாநில பணி மூப்பு அடிப்படையில் மாவட்டத்தில் 4 பி.டி.ஓ.க்களுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.இவர்கள் பதவி உயர்வு வேண்டாம் என தவிர்கின்றனர். இப் பதவியில் அரசு வாகனம், உதவியாளர், அதிகாரம் என்பதால் தொடர விரும்புகின்றனர்.
பதவி உயர்வில் வெளி மாவட்ட மாறுதல், அதிகாரமில்லாத பதவி என கருதி பதவி உயர்வை விரும்ப வில்லை. பதவி உயர்வில் செல்லாததால் அடுத்து பதவி உயர்வை எதிர்பாத்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏ.பி.டி.ஓ.க்கள், துணை வட்டார வளர்சசி அலுவலர் பதவி உயர்வு பெற முடியவில்லை என இத் துறை அலுவலர்கள் புலம்புகின்றனர். பதவி உயர்வு தேவையில்லை என்றால் அடுத்து முன்னுரிமையில் உள்ளவருக்கு வாய்ப்ளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி செயலர்கள் 7 ஆண்டுகள் முடித்தால் இளநிலை உதவியாளராக பதவி உயர்வில் செல்ல வேண்டும்.இவர்களும் பதவி உயர்வில் செல்வதை தவிர்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X