பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் கண்டுபிடிப்பில் ஊக்கப்படுத்த வேண்டும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவுரை

Added : டிச 02, 2019
Advertisement

உத்தமபாளையம்:ஆரம்ப கல்வி முதல், மாணவர்களை அறிவியல் கண்டுபிடிப்புகளில்ஊக்கப்படுத்த ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி வேண்டுகோள் விடுத்தார்.ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். தொடக்கபள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. எஸ்.யூ.எம். பள்ளிகளின் தாளாளர் எம்.எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கலாராணி முன்னிலை வகித்தாா்.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை மீனாட்சி வரவேற்றார்.கண்காட்சியை துவக்கி வைத்து, மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி பேசியதாவது :நாளுக்கு நாள் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி அபரிதமாக உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனிதகுலத்திற்கு நன்மைகளும், தீமைகளும் இருந்த போதும், நாம் நன்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆரம்ப கல்வி முதல் மாணவர்கள் ஆர்வம் காட்ட, ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மதலைமுத்து, உத்தமபாளையம் வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி, பள்ளி ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X