சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை வழக்கு; ஐந்து பேர் கைது

Added : டிச 02, 2019
Advertisement
 வாலிபர் கொலை வழக்கு; ஐந்து பேர் கைது

திட்டக்குடி:வாலிபரை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில், இளம்பெண் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வையங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் மகன் மணிகண்டன்,30. திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த நவம்பர் 26ம் தேதி காலை, வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.திட்டக்குடி டி.எஸ்.பி., வெங்கடேசன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோகன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போன மணிகண்டனுக்கும், அவரது அண்ணி காசியம்மாளுக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த மணிகண்டன், காசியம்மாள்,30; மீது சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவருக்கும் இடையே தகராறு முற்றிய போது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மணிகண்டனை சமாதானப்படுத்தியும் அவர் கட்டுப்படவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த காசியம்மாள், காய்கறி வெட்டும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தார். சிறுவன் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார். மேலும், தகவலறிந்து வந்த அதே ஊரை சேர்ந்த அஞ்சுருண்டை என்கிற பன்னீர்செல்வம்,57; செல்லம்மாள்,55; பெரியநாயகம்,35; ஆகியோர் தடயங்களை அழித்து, ஆயுதத்தை மறைத்துள்ளனர்.இதையடுத்து காசியம்மாள் உள்ளிட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X