பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்: முன்னாள் காங்., எம்.எல்.ஏ.,உளறல்| 'Priyanka Chopra Zindabad': Congress leader hails actor instead of Priyanka Gandhi Vadra | Dinamalar

பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்: முன்னாள் காங்., எம்.எல்.ஏ.,உளறல்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (21)
புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற பேரணியில் காங்., எம்.எல்.ஏ.,ஒருவர் பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என உளறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் தலைநகர் டில்லியில் பேரணி ஒன்று நடைபெற்றது.இதில் டில்லி பாவனா தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவரான முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுரேந்தர் குமார் என்பவரும், கட்சியின் டில்லிபிரிவு தலைவருமான சுபாஷ் சோப்ராவும் கலந்து கொண்டனர்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற பேரணியில் காங்., எம்.எல்.ஏ.,ஒருவர் பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என உளறினார்.
latest tamil newsகாங்கிரஸ் கட்சி சார்பில் தலைநகர் டில்லியில் பேரணி ஒன்று நடைபெற்றது.இதில் டில்லி பாவனா தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவரான முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுரேந்தர் குமார் என்பவரும், கட்சியின் டில்லிபிரிவு தலைவருமான சுபாஷ் சோப்ராவும் கலந்து கொண்டனர்.


latest tamil news
பேரணியின் போது சுரேந்திர குமார், சோனியா ஜிந்தாபாத், காங்கிரஸ் கட்சி ஜிந்தா பாத் , என்று குரல் எழுப்பிய அவர் பிரியங்கா என்பதற்கு பதிலாக ஆர்வ மிகுதியில் பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என குரல் எழுப்பினார். உடனடியாக அவரது தவறு சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர் பின்னர் பிரியங்கா ஜிந்தாபாத் என சரியாக குரல்எழுப்பினார்.

இச்சம்பவம் அனைத்தும் உடனடியாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.தொடர்ந்து டுவிட்டர் பதிவிட்டாளர்கள்

கடவுளுக்குநன்றி! நல்ல வேளை ராகுல் அந்த பேரணியில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் ராகுல் பஜாஜ் ஜிந்தாபாத் என குரல் எழுப்பி இருப்பர் எனவும்

பிரியங்கா சோப்ரா எப்போது காங்கிரசில் சேர்ந்தார் எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்
இதனையடுத்து சமூக வலை தளங்களில் பிரியங்கா சோப்ரா டிரெண்ட் ஆகி வருகிறார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X