தெருவிளக்கு எரியாததால் தொல்லை: மொடக்குறிச்சி யூனியன், குளூர் பஞ்., திருஞானசம்பந்த புரத்தில், இரண்டு வாரமாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் மக்கள் இருட்டில் நடமாடும் நிலை உள்ளது. குடியிருப்புகள் அருகே தோட்டம் இருப்பதால், இரவில் விஷ ஜந்துக்கள் நடமாடுவதால், குழந்தைகள், பெண்கள் அச்சப்படுகின்றனர். பஞ்., நிர்வாகம் தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும்.
- ஆர்.சந்திரசேகர், திருஞானசம்பந்தபுரம்.
பள்ளி அருகில் பயமுறுத்தும் மின் கம்பம்: பவானி யூனியன், தொட்டிபாளையம் பஞ்., சேர்வராயன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் உள்ள மின் கம்பம், மோசமான நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசினால் உடையும் அபாயத்தில் காணப்படுகிறது. பவானி மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கம்பத்தை மாற்ற வேண்டும் என்பதால், அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர். செலவுக்கு பயந்து குழந்தைகளின் கதியை புறக்கணிக்கலாமா?
- கி.ஜெயபிரகாஷ், சேர்வராயன்பாளையம்.