மேட்டுப்பாளையம் : சுவர் இடிந்து 17 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் : சுவர் இடிந்து 17 பேர் பலி

Updated : டிச 03, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (9)
Share
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 4 வீடுகளில் இருந்த 17 பேர் பலியாகி உள்ளனர்.மேட்டுப்பாளையம் நடூர் - ஏடிக்காலனி பகுதியில் மழை காரணமாக தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து, அருகில் இருந்த 4 வீடுகளில் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளும் இடிந்து சேதமாகின. இதில் 4 வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள்

இந்த செய்தியை கேட்க

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 4 வீடுகளில் இருந்த 17 பேர் பலியாகி உள்ளனர்.



latest tamil news



மேட்டுப்பாளையம் நடூர் - ஏடிக்காலனி பகுதியில் மழை காரணமாக தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து, அருகில் இருந்த 4 வீடுகளில் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளும் இடிந்து சேதமாகின. இதில் 4 வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். இதுவரை தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.


4 வீடுகளில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் 4 பெண்கள், 7 குழந்தைகள் உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.


latest tamil news



latest tamil news


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X