பொது செய்தி

தமிழ்நாடு

சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

Added : டிச 02, 2019
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி - பவானிசாகர் சாலையில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து, திருப்பணி தொடங்கியது. வேலை முடிந்த நிலையில், கடந்த, 29ல், விநாயகர் வழிபாட்டுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து கோபுரங்களுக்கு, கலசம் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 8:45 மணியளவில், கோபுர

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி - பவானிசாகர் சாலையில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து, திருப்பணி தொடங்கியது. வேலை முடிந்த நிலையில், கடந்த, 29ல், விநாயகர் வழிபாட்டுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து கோபுரங்களுக்கு, கலசம் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 8:45 மணியளவில், கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து மூலவர் சக்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மஹா அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடந்தது. புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.* அரச்சலூர் அருகே முதலியார் காலனி, சக்தி நகரில் ஸ்ரீசெல்வசக்தி விநாயகர் கோவில், கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. ரவி, கணேசன் சிவாச்சாரியார்கள், மஹா கும்பாபிஷேக விழாவை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X