பொது செய்தி

தமிழ்நாடு

சின்னமாரியம்மன் கோவில் குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்

Added : டிச 02, 2019
Advertisement

ஈரோடு: கருங்கல்பாளையம், சின்னமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு, கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கம்பம் நடுதல், பூவோடு நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வான, தீ மிதிக்கும் விழா, நேற்று நடந்தது. தலைமை பூசாரி பிரகாஷ், ராஜா ஆகியோர், பூவோடு ஏந்தியபடி முதலில் குண்டம் இறங்கினர். அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகர் மற்றும் பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் திருநங்கையர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி கருங்கல்பாளையம் போலீசார், பாதுகாப்பில் ஈடுபட்டனர். மதியம் தேரோட்டம் நடந்தது. இன்று தீர்த்த ஊர்வலம், நாளை பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம், 4ல் கம்பம் எடுத்தல், 5ல் மஞ்சள் நீராட்டு அம்மன் திருவீதியுலா, மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X