பொது செய்தி

தமிழ்நாடு

அவல்பூந்துறை நால்ரோடு சாலை விரிவாக்கப்பணி: அதிகாரிகள் கண்ணாமூச்சி ஆட்டம்; மக்கள் ஆவேசம்

Added : டிச 02, 2019
Advertisement

மொடக்குறிச்சி: அவல்பூந்துறை நால்ரோடு சாலை விரிவாக்கப்பணியில், அதிகாரிகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதாக, மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மொடக்குறிச்சி அருகே, அவல்பூந்துறை நால்ரோட்டில், நிழற்கூடம் மற்றும் சுகாதார வளாகம் அமைக்க, எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, பேரூராட்சி அதிகாரிகள், சில நாட்களுக்கு முன் பூமி பூஜை செய்தனர். சுகாதார வளாகம் கட்டப்படும் இடம், செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சொந்தமான, பாவடி நிலம் எனக்கூறி, பணிகளை துவக்க, நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சங்க நிர்வாகிகள் மீது, பேரூராட்சி செயல் அலுவலர் மகாலட்சுமி, அரச்சலூர் போலீசில் புகார் தந்தார். இதன்படி லோகநாதன், கோவிந்தசாமி, குமார், சோமு உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகியுள்ள அவர்கள், நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அவல்பூந்துறையை சேர்ந்த ஜெகநாதன், கலெக்டரிடம் கடந்த, 29ல் சுகாதார வளாகம் கட்டவேண்டும் எனக்கூறி மனு அளித்தார். அதை, மொடக்குறிச்சி தாசில்தாருக்கு அனுப்பிய கலெக்டர், அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார். பாவடி நில போராட்டக்காரர்கள் உள்ளிட்ட அனைவரும், 30ம் தேதி அமைதி பேச்சு வார்த்தைக்கு, மொடக்குறிச்சி தாலுகா அலுவலகம் வரும்படி, தாசில்தார் அழைப்பு விடுத்தார். தலைமறைவாக உள்ள சங்க நிர்வாகிகள் வராததால், பேச்சுவார்த்தை நடக்கவில்லை. ஒரு பக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய, மறுபக்கம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து, அதிகார வர்க்கம், பாவடி நிலம் தொடர்பான பிரச்னையில், கண்ணாமூச்சி ஆடுகிறது. போதாக்குறைக்கு அரசியலும் சேர்ந்து விட்டது என்று, அவல்பூந்துறை மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X