சிவகிரியில் 598 பேருக்கு லேப்டாப் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவகிரியில் 598 பேருக்கு லேப்டாப் வினியோகம்

Added : டிச 02, 2019
Share

ஈரோடு: கொடுமுடி வட்டார, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 2017 - 18ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி, சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், 112 பேர், தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 52 பேர், சாலைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 36 பேர், தாமரை பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 49 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. இதேபோல் எஸ்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி கொடுமுடி மாணவர்கள், 147 பேர், பாசூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 38 பேர், சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 84 பேர், வெள்ளோட்டாம்பரப்பு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 46 பேர், ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 34 பேர் என, 598 பேருக்கு, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, லேப்டாப் வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X