பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : டிச 02, 2019
Advertisement

விபரீதம் மறந்து செல்பிக்கு ஆசை: கோபி, பச்சமலை முருகன் கோவிலில், சரிந்து விழுந்த மதிற்சுவர் கட்டமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது. இந்த கட்டமைப்பு மீது நின்று, மலையின் அடிவாரத்தில் உள்ள காட்சிகளை, வெளியூர் பக்தர்கள் படம் பிடித்து, செல்பியும் எடுக்கின்றனர். கவனம் பிசகினால், தவறி விழும் வாய்ப்புள்ளது. இதற்கு எத்தனை உதாரணங்களை சொல்வது? உணர்ந்து திருந்துவதுதானே உத்தமம். ஆனால், நிலைமை அப்படியா உள்ளது. கோவில் நிர்வாகம் எச்சரிக்கலாமே?
சகதி சாலை... தீருமா கவலை? அந்தியூர் யூனியன், எண்ணமங்கலம் பஞ்.,ல் கரட்டாங்காட்டில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் அனைத்துவித தேவைக்கும், ?.? கி.மீ., தூரத்தில் உள்ள எண்ணமங்கலத்துக்கு செல்ல வேண்டும். செம்மண் சாலை என்பதால் சிரமப்படுகின்றனர். தொடர் மழையால், சகதிக்காடாகி விட்டது. மக்கள் கோரிக்கையை ஏற்று, தார்ச்சாலை அமைக்க, கடந்த வாரம் பூஜை நடந்தது. மெத்தனம் காட்டாமல், பணியை தொடங்கி, முடிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

கம்பம் உடைந்து விழும் அபாயம்: மொடக்குறிச்சி யூனியன், குளூர் பஞ்., தொட்டிப்பாளையம் அருகே களப்பாறைக்காட்டில், மின் கம்பம் உள்ளது. உச்சி பகுதியில், சிமென்ட் காரை பெயர்ந்து, கம்பி தெரிகிறது. எந்நேரமும் கம்பம் முறிந்து விழும் நிலையில் இருப்பதாக, அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். புகார் தெரிவித்தும், மின் வாரிய அதிகாரிகள், மெத்தனம் காட்டுவதாக, களப்பாறைக்காடு மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடையும் முன் நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நூலகத்துக்கு இடையூறு: ஈரோடு, கருங்கல்பாளையத்தில், பாரதியார் நூலகம் உள்ளது. இதன் நுழைவாயில் முன், ஆவின் பால் டிரேக்களை அடுக்கி வைத்துள்ளனர். நூலகம் திறந்த பின்பும் எடுப்பதில்லை. இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் தடுமாறுகின்றனர். நூலகம் திறந்திருக்கும் நாட்களிலேயே இந்நி?ல என்றால், மற்ற நாட்களில் இந்த இடத்துக்கு, நேரும் கதியை சொல்லத் தேவையில்லை. சம்பந்தபட்டவர்கள் ஆவின் பால் டிரேக்களை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X