தமிழ்நாடு

விட்டு விட்டு சாரல் மழை; வீடுகளில் முடங்கிய மக்கள்

Added : டிச 02, 2019
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், நாள் முழுவதும் விட்டுவிட்டு பெய்த சாரல் மழையால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், ஈரோடு மாநகரில், நேற்று அதிகாலை முதல், சாரல் மழை அடிக்கத் துவங்கியது. ஒரேயடியாக கொட்டாமல், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை விட்டுவிட்டு பெய்தது. வெளியில் கிளம்பலாம் என்று புறப்பட்ட போது மழை பெய்வதும், உள்ளே போய் அமரலாம் என்று சென்றால், மழை நின்றும் கண்ணாமூச்சி காட்டியது. இதனால் பலர் வேலையை ஒத்திப்போட்டு, வீடுகளில் முடங்கினர். சாரல் என்றாலும், மாநகர சாலைகள், பல இடங்களில் சேறு, சகதியாக மாறி, வெளியில் தலைகாட்டிய ஒரு சிலரையும், வேதனைப்பட வைத்தது. பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

* மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதலே, தூறல் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்கு ஆளாகினர். நேற்றும் தொடர்ந்ததால், தொல்லையும் தொடர்ந்தது. குறிப்பாக விவசாயம், கட்டடப்பணிகள் பாதித்தன. விடுமுறை நாளாகவும் இருந்ததால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.


* அந்தியூர், பவானி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசாக பெய்த மழை, சாரல் மழையானது. பிறகும் மீண்டும் அதேபோல் தொடங்கி, மதியம் வரை பெய்தது. மாலை வரை விட்டு விட்டு தூறல் போட்டதால், இதமான சூழல் நிலவியது.


* கோபியில் காலை, 6:00 மணி முதல், சாரல் மழை பெய்ய துவங்கியது. இதேபோல் நம்பியூர் டவுன், குருமந்தூர், ஆயிபாளையம், குருமந்தூர்மேடு, அளுக்குளி, கோவை பிரிவு பகுதிகளிலும், சாரல் மழை பெய்தது. அடிக்கடி விட்டுவிட்டு பெய்ததால், இயல்பு வாழ்க்கை பாதித்தது. மழையால் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு, தண்ணீர் திறக்கவில்லை. கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.


* புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், காலை, 6:00 மணி முதல், சாரல் மழை பெய்ய துவங்கியது. மாலை, 6:30 மணி வரை, விட்டுவிட்டு பெய்தது. இதனால், இதமான சூழல் ஏற்பட்டாலும், நாள் முழுவதும் சாரல் மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X