பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, பெண் யானை வேதநாயகி, கடந்த, 29ம் தேதி இறந்தது. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை அளிக்க, மருத்துவ குழுவினரும் தயாரான வேளையில், திடீரென யானை இறந்தது. அமைச்சர் கருப்பணன், யானை புதைக்கப்பட்ட இடத்தில், நேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின் அவர் கூறியதாவது: கடந்த, 30 ஆண்டுகளாக இறைப்பணி செய்த வேதநாயகி, உடல் நலக்குறைவால் இறந்து போனது. அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலம் குட்டி யானை அல்லது பெரிய யானை வாங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.