சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

Added : டிச 02, 2019
Advertisement

கோபி: சத்தி அருகே, கோவில் பூட்டை உடைத்து, பணம் திருடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் அருகே கொத்துக்காட்டில், மஞ்ச மாகாளியம்மன் கோவில் உள்ளது. கடந்த, நவ.,29ல், காலையில் பூசாரி சின்னசாமி, 50, வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். முன்பக்க இரும்பு கேட்டில் இருந்த, பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் சிலைக்கு அருகே வைத்திருந்த, 200 ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. கோவில் தர்மகர்த்தா, கோபால், 54, புகாரின்படி, கடத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து, 200 ரூபாய் திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X