சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேக்ளா பந்தயத்தில் குதிரை பலி: பவானி அருகே பரபரப்பு

Added : டிச 02, 2019
Share
Advertisement
பவானி: பவானி அருகே, ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற குதிரை, திடீரென சுருண்டு விழுந்து இறந்ததால், பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பவானி அருகே காடையம்பட்டியில், குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், 21வது ஆண்டாக, ரேக்ளா பந்தயம் நேற்று நடந்தது. மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. காடையம்பட்டி தொடங்கி ஒரிச்சேரி வரையில், 8 கி.மீ.,

பவானி: பவானி அருகே, ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்து சென்ற குதிரை, திடீரென சுருண்டு விழுந்து இறந்ததால், பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பவானி அருகே காடையம்பட்டியில், குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், 21வது ஆண்டாக, ரேக்ளா பந்தயம் நேற்று நடந்தது. மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. காடையம்பட்டி தொடங்கி ஒரிச்சேரி வரையில், 8 கி.மீ., தூரத்துக்கு, ஆப்பக்கூடல் சாலையில் குதிரைகள் சீறிப்பாய்ந்து சென்றன. சாலையின் இருபுறமும் திரண்ட மக்கள் பார்த்து ரசித்தனர். திருச்சி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், குதிரை ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. பலியான குதிரை: உள்ளூர் குதிரைகளுக்கான போட்டியில், சீறிப்பாய்ந்த ஒரு குதிரை, பெரியமோளபாளையம் எம்.ஜி.ஆர்., நகர் அருகே சென்றபோது, நிலை தடுமாறியது. வண்டியை ஓட்டியவர் சுதாரித்துக் கொண்டு, சாலையோரம் நிறுத்த முயன்றார். அப்போது சுருண்டு விழுந்த குதிரை இறந்தது. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X