பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : டிச 02, 2019
Advertisement

சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி: தலைவாசல், நத்தக்கரையிலுள்ள பிள்ளையார் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, சாக்கடை கால்வாய் இல்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையோரம் தேங்குகிறது. அதனால், துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. தொடர்ந்து தேங்கும் கழிவுநீரால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சாக்கடை கால்வாய் கட்ட, அதிகாரிகளிடம் புகாரளித்தும் பலனில்லை.

- சி.பழனிவேல், நத்தக்கரை.

ஜி.ஹெச்.,ல் ஆம்புலன்ஸூக்கு இடையூறு: சேலம், அரசு மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகம் முன், சாலை இருபுறமும், மருத்துவர்கள், தங்கள் கார்களை நிறுத்திவிடுகின்றனர். இதனால், ஆம்புலன்ஸ் வாகனங்கள், விரைவாக வரமுடியாமல் சிக்கி திணறுகின்றன. நுழைவாயில் முன், கழிவுநீர் கால்வாயின் சிமென்ட் சிலாப் உடைந்துள்ளதால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுவதால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

- எம்.குமரன், ஆண்டிப்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X