பொது செய்தி

தமிழ்நாடு

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

Added : டிச 02, 2019
Advertisement

சேலம்: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, பைக், மாணவ, மாணவியர் ஊர்வலம், கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சேலம், கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று, இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை, கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பைக்கர்ஸ் கிளப் உறுப்பினர், 50க்கும் மேற்பட்டோர், ஹெல்மெட் அணிந்து, முள்ளு வாடி கேட், அஸ்தம்பட்டி, ஐந்துரோடு, மூன்று ரோடு, திருவாக்கவுண்டனூர் பைபாஸ், கொண்டலாம்பட்டி, குகை வழியாக வந்து, மீண்டும், கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். தொடர்ந்து, மாணவ, மாணவியர் ஊர்வலத்தையும், கலெக்டர் தொடங்கிவைத்தார். திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக வந்த ஊர்வலம், அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. அதில், அரசு மருத்துவ கல்லூரியின் செவிலியர் கல்லூரி, விநாயகா மிஷன் ?ஹாமியோதெரபி மருத்துவ கல்லூரி, அன்னபூரணா செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர் அணிவகுத்தனர். முன்னதாக, சமூக பங்களிப்பு மூலம், 'எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தை ஏற்படுத்தல்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, கலெக்டர் உறுதிமொழி வாசிக்க, அதை, அரசு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர். பின், கையெழுத்து இயக்கம் நடந்தது.
15 ஆயிரம் பேருக்கு...: இதையடுத்து, உலக எய்ட்ஸ் தின செய்தி வெளியிடப்பட்டது. அதில், சேலம் மாவட்டத்தில், இதுவரை, 15 ஆயிரத்து, 464 பேருக்கு, எச்.ஐ.வி., தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், 9,548 பேருக்கு, கூட்டு மருந்து சிகிச்சை, சேலம், ஆத்தூர், ஓமலூர் மையங்களில், இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், எச்.ஐ.வி., கிருமி அளவை கணக்கிடும் கருவி இருப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டன.

அஸ்தம்பட்டியில்...: மக்கள் மேம்பாட்டு வினையகம் அமைப்பு சார்பில், அஸ்தம்பட்டி ரவுண்டானாவில், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் அருணாசலம் தொடங்கிவைத்தார். அதில், வாகன ஓட்டிகளிடம், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, திட்ட மேலாளர் சுபா உள்ளிட்ட அமைப்பினர் ஏராளமானோரிடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X