பொது செய்தி

தமிழ்நாடு

சிமென்ட், கம்பிகள் வாங்க பசுமை வீடு கட்டும் பயனாளிகள் அலைக்கழிப்பு

Added : டிச 02, 2019
Advertisement

கொளத்தூர்: கொளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், சிமென்ட், கம்பிகள் வாங்க வரும் பயனாளிகள், தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்களின் மொபைல் எண்கள் இல்லாததால் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பசுமை வீடு, மத்திய அரசின் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளுக்கு வீடு கட்ட, சிமென்ட், கம்பிகள் வழங்கப்படுகின்றன. அதற்கான தொகை, பயனாளிகளுக்கு வீடு கட்ட ஒதுக்கப்படும் நிதியில் பிடித்தம் செய்யப்படும். அத்துடன், சிமென்ட், கம்பிகள் வாங்க, பயனாளிகள் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர், அவை கிடைக்க தாமதமாகும்பட்சத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் தொலைபேசி எண் அடங்கிய பலகை, ஒன்றிய அலுவலகத்தில் வைக்க, அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, ஒன்றிய அலுவலர்கள் அறிவிப்பு பலகையை, அலுவலக வளாகத்திலுள்ள சிமென்ட் குடோனில், கடந்த, 25ல் பொருத்தினர். ஆனால், தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மொபைல் எண், தொலைபேசி எண்ணை எழுதவில்லை. இதனால், ஒன்றிய அலுவலகத்துக்கு, சிமென்ட், கம்பிகள் வாங்க வரும் பயனாளிகள், எந்த அலுவலரை தொடர்பு கொள்வது என தெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X