பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன வெங்காயம் விலை ரூ.150 ஆக எகிறியது

Added : டிச 02, 2019
Advertisement

ஆத்தூர்: தலைவாசலில், சின்ன வெங்காயம் கிலோ, 150 ரூபாய், பெரிய வெங்காயம், 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சேலம் மாவட்டம், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்கப்படும் பெரிய வெங்காயம், மஹாராஷ்டிரா, ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில் பெய்த மழையால், செப்டம்பர், அக்டோபரில், வெங்காயம் விளைச்சல் வெகுவாக பாதித்தது. இதனால், இந்தியா முழுவதும், வெங்காயம் விலை அதிகளவில் விற்கப்படுகிறது. தற்போது குறைந்தளவில் மட்டும், வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. சில நாளாக, ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், சில்லரை விற்பனை கடைகளில், 100 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம், தற்போது, 150 முதல், 180 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல், பெரிய வெங்காயம் விலையும் அதிகரித்து, கிலோ, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
காளான் விலை உயர்வு: கார்த்திகையில், ஐயப்பன் கோவிலுக்கு, பக்தர்கள் மாலை அணிந்து, வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், முகூர்த்த நாள், கோவில் திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதனால், ஆடு, கோழி, மீன் இறைச்சி விற்பனை குறைந்துள்ளது. அசைவ பிரியர்கள், தற்போது, 'காளான்' அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால், 200 கிராம் காளான், 50 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X