பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி முகத்துவாரத்தில் அடைப்பு; முட்புதரில் கதவணை: ஓடையில் வரும் மழைநீரை சேமிக்க முடியாத அவலம்

Added : டிச 02, 2019
Advertisement

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஏரிக்குள் தண்ணீர் நுழையும் முகத்துவாரம், கதவணை பகுதி புதர்மண்டியுள்ளதால், ஒரு மாதமாக, ஓடையில் வரும் மழைநீர், ஏரிக்குள் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள, போதமலை, கிடமலை தொடரில் உற்பத்தியாகும் தண்ணீர், ஓடை வழியாக, பனமரத்துப்பட்டி ஏரிக்கு வந்தடையும். 10 ஆண்டுக்கு மேலாக, ஏரி வறண்டு, 2,400 ஏக்கரிலும் சீமைக்கருவேல மரங்களே வளர்ந்துள்ளன. திப்பம்பட்டியில், ஓடையில் வரும் தண்ணீர், ஏரிக்குள் நுழையும் முகத்துவார பகுதி உள்ளது. அங்கு, ஓடையை மறித்து, இரும்பு கதவுகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. அதனால், ஓடையில் வரும் தண்ணீர், மலையை பிளந்து அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக, ஏரிக்குள் திருப்பி விடப்படும். ஏரி நிரம்பிய பின், கால்வாயிலுள்ள இரும்பு கதவு அடைக்கப்பட்டு, ஓடையிலுள்ள இரும்பு கதவு திறந்துவிடப்படும். இதனால், நீர் ஏரிக்குள் செல்லாமல் தடுக்கப்படும். ஆனால், தற்போது கால்வாயிலிருந்த கதவை காணவில்லை. ஓடையிலுள்ள இரண்டு கதவுகளும் சேதமடைந்துள்ளன. அங்கிருந்த தளவாட பொருட்களும் மாயமாகி விட்டன. முட்புதர் பிடியில், கதவணை பகுதி சிக்கியுள்ளது. தற்போது, பருவமழையால் ஒரு மாதமாக, ஓடையில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. ஆனால், முகத்துவாரம் பகுதி தூர்வாரப்படாமல், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ளதால், ஓடையில் வரும் தண்ணீர், ஏரிக்குள் செல்லாமல், உடைந்து கிடக்கும் கதவு வழியாக வெளியேறி வீணாகிறது. மேலும், ஓடையில் தேங்கி, அக்கம் பக்கத்தில் பாய்கிறது. முகத்துவார அடைப்பால், ஓடையில் வரும் நீரை சேமிக்க முடியாத அவலம் உள்ளதால், நடப்பாண்டும், ஏரி வறண்டுவிடும் சூழல் ஏற்படும். அதனால், சேலம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், கதவணை, முகத்துவாரம் பகுதியை சீரமைக்க, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X