சேலம்: மருத்துவமனையில் ரகளை செய்த, குண்டாஸ் கைதி மீது, நான்கு பிரிவில் வழக்குப்பதியப்பட்டது. சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 26. இவர், வழிப்பறி, கொலை முயற்சி வழக்கில், நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை போலீசார், கடந்த ஜூலை, 29ல் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் சட்டமும் பாய்ந்தது. நேற்று முன்தினம், வயிற்றுவலிக்கு, சேலம், அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவர், பிளேடால், கழுத்து, கையில் கிழித்துக்கொண்டு, டாக்டரை மிரட்டி ரகளை செய்தார். இதுகுறித்து, வழிக்காவல் போலீஸ்காரர் சக்திவேல், மருத்துவமனை போலீசில் புகாரளித்தார். அதனால், கெட்டவார்த்தையால் திட்டியது, தற்கொலை முயற்சி, அரசு ஊழியரை பணிபுரிய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப்பதிந்து, விசாரணை நடக்கிறது.