தாலி பறித்த வழக்கு: கூட்டாளியும் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாலி பறித்த வழக்கு: கூட்டாளியும் கைது

Added : டிச 02, 2019

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி, கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்தவர் அமுதா, 50. இவரிடம், கடந்த, 25ல், நான்கு பவுன் தாலிக்கொடியை, 'பல்சர்' பைக்கில் வந்த இருவர் பறித்துச்சென்றனர். கன்னங்குறிச்சி போலீசார், கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம், 26, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். பைக், தாலிக்கொடி பறிமுதல் செய்யப்பட்டது. அவரது வாக்குமூலத்தின்படி, கூட்டாளியான, அரியலூரைச் சேர்ந்த விக்கி, 25, நேற்று, கைது செய்யப்பட்டார். இருவரும், வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என, விசாரணை தொடர்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X