பெண் டாக்டர் பலாத்கார கொடூரம் : நடந்தது என்ன ?

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (80)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே, கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கில், பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.திட்டமிட்டு, இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது.தலைநகர் ஐதராபாதுக்கு அருகே, புறநகர் பகுதியான ஷாம்ஷதாபாதில், 27 வயது

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே, கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கில், பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.latest tamil news


திட்டமிட்டு, இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது.தலைநகர் ஐதராபாதுக்கு அருகே, புறநகர் பகுதியான ஷாம்ஷதாபாதில், 27 வயது கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். மேலும் அவருடைய உடல் எரிக்கப்பட்டுள்ளது.கைதுஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, டிரக் டிரைவர்கள், கிளீனர்கள் என, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'இந்த கொடூரத்தைச் செய்த அவர்களை விசாரணையில்லாமல் துாக்கிலிட வேண்டும்' என, நாடு முழுவதும் பலர் கொந்தளிப்புடன் கூறி வருகின்றனர்.


போலீசார் தகவல் :

இந்த நிலையில், கைது நடவடிக்கை குறித்த அறிக்கையில், போலீசார் கூறியுள்ளதாவது:கடந்த மாதம், 27ம் தேதி மாலை, 6:15க்கு, கால்நடை பெண் டாக்டர், ஷாம்ஷதாபாத் சுங்கச் சாவடி அருகே, தன் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அங்கிருந்து, தன் தோல் பிரச்னைக்காக டாக்டரை பார்க்க, டாக்சியில் சென்றுள்ளார். அந்த பெண் டாக்டர், இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தியதை, குற்றவாளிகள் பார்த்துள்ளனர்.அதையடுத்து, அதன் ஒரு டயரை, பஞ்சர் செய்துள்ளனர். பின்னர் மது அருந்திவிட்டு, அந்தப் பகுதியிலேயே காத்திருந்தனர். இரவு, 9:15 மணிக்கு பெண் டாக்டர் வந்துள்ளார்.டயர் பஞ்சராகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.


latest tamil newsவாயில் விஸ்கி ஊற்றி பலாத்காரம் :


இந்த நேரத்தில், 20 - 26 வயதுடைய இந்த நால்வரும் உதவி செய்வது போல், அவருடன் பேச்சு கொடுத்துள்ளனர்.சுங்கச் சாவடிக்கு அருகில் உள்ள ஒரு புதருக்கு பெண் டாக்டரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். எரிப்புஅவர் சத்தம் போடவே, கையில் வைத்திருந்த விஸ்கியை, பெண் டாக்டர் வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றியுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை, நான்கு பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.மயக்கம் தெளிந்த பெண் டாக்டரை, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின், ஒரு போர்வையில், உடலை சுற்றி, அருகில் உள்ள ஒரு சிறு பாலம் அருகே, 28ம் தேதி அதிகாலை, 2:30 மணிக்கு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். திட்டமிட்டு, இந்த கொடூரத்தை அவர்கள் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நால்வரில் ஒரு டிரைவரின், 'லைசென்ஸ்' இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலாவதியாகி விட்டது. இது தொடர்பாக போக்குவரத்து துறையினர் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, சுங்கச் சாவடி அருகே, அவருடைய வாகனம் நிறுத்தப்பட்டது. ஆனால், அந்த வாகனத்தை பறிமுதல் செய்யாமல் இருந்துள்ளனர். அதனால், அந்த நபர் அந்தப் பகுதியிலேயே சுற்றி வந்துள்ளார்; அவருடைய நண்பர்களும் அவருடன் இணைந்துள்ளனர்.இவ்வாறு கைது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.புகார்இந்த நிலையில், 27ம் தேதி இரவு, 10:00 மணியளவில், பெண் டாக்டர் காணாமல் போனது தொடர்பாக, அவருடைய குடும்பத்தார் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். 'புகாரை ஏற்காமல், மாறி மாறி வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அலைக்கழித்துள்ளனர். உரிய நேரத்தில் புகாரை ஏற்று, விசாரணை நடத்தியிருந்தால், கொலை சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, தகுந்த நேரத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்காததால், ஒரு சப் - இன்ஸ்பெக்டர் உட்பட, மூன்று போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.துரத்தியடித்த மக்கள்பெண் டாக்டர் கொலை சம்பவம் நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது. வழக்கம் போல், இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொள்ள அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் முயற்சித்தனர். ஆனால், பொதுமக்கள் அவர்களை அடித்து விரட்டியுள்ளனர்.உயிரிழந்த பெண் டாக்டர், ஷாம்ஷாதாபாதில் உள்ள ஒரு குடியிருப்பில், வசித்தார். அந்த குடியிருப்பின் கதவை பூட்டிய மக்கள், அதன் அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பெண் டாக்டரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க, பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உட்பட பிரபலங்கள் வந்தனர். அவர்களை மக்கள் விரட்டி அடித்தனர்.


latest tamil news


மேலும், 'ஊடகங்கள், போலீசார், வெளியாட்களுக்கு அனுமதி இல்லை. உங்களுடைய அனுதாபம் தேவையில்லை; நடவடிக்கை மற்றும் நீதி தான் தேவை' என, பெரிய பதாகையையும் அங்கு வைத்துள்ளனர்.'சம்பவம் நடந்து நான்கு நாட்களாகியும், முதல்வர் சந்திரசேகர ராவ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிரதமர் மோடியும் எந்தக் கருத்தையும் ஏன் வெளியிடவில்லை?' என, அந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - kailasa,இந்தியா
05-டிச-201919:55:40 IST Report Abuse
Tamilan இதை பார்த்த பெத்த மனம் எப்படி துடித்திருக்கும் ......கடவுளே ....இந்த மகாகொடுமை எல்லாம் பார்த்து அமைதியாக இருக்கிறாயே .......
Rate this:
Cancel
Kumar Thamizhlan - Chennai,இந்தியா
03-டிச-201911:38:27 IST Report Abuse
Kumar Thamizhlan வெளிநாட்டு காரன் பாத்து பயப்படுகிறான் இந்த மோடி ஆட்சியில் இந்தியாவில் படித்த டாட்டர்க்கு கூடி பாதுகாப்பு கொடுக்காத சுற்றுலா சுத்துகிறார் என்று. பலாத்காரம் செய்த நபர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று பார்த்து அந்த மத குருமாரிடம் போய் காண்பிக்க வேண்டும்
Rate this:
Cancel
Saravana - Hyderabad,இந்தியா
02-டிச-201918:43:11 IST Report Abuse
Saravana Catch these four people, Fire them in same place where they fired the doctor after cutting their Penis. How dare these people do this activity. These four animals must be killed in front of public. It's shame for everyone in India.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X