சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலியே பயிரை மேய்ந்தது: கோவில் நிலத்தில் 150 பனைமரங்கள் 'அபேஸ்': பூசாரி உள்பட 6 பேருக்கு காப்பு

Added : டிச 02, 2019
Advertisement

சேலம்: சேலம் அருகே, கோவில் நில பனை மரங்களை வெட்டி கடத்திய பூசாரி உள்பட ஆறு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், கருப்பூர், கைலாச நாதர் கோவிலுக்கு, அதே பகுதியில், 8.5 ஏக்கரில், 150க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருந்தன. பரம்பரை அறங்காவலர் கல்யாணசுந்தரம், கோவில், நிலத்தை பராமரித்து வந்தார். கோவில் நிலத்திலிருந்த பனைமரங்கள, வெட்டி கடத்துவதாக, சேலம், உதவி ஆணையர் உமாதேவியின் மொபைல் போனுக்கு தகவல் வந்தது. அதேநேரம், திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், சம்பவ இடத்தில், கடத்தப்பட்ட பனைமரங்களை, இரு டிராக்டருடன் தடுத்து நிறுத்தினார். இதுகுறித்து, ஓமலூர் சரக, அறநிலையத்துறை ஆய்வாளர் கேசவநாராயணா, 55, கருப்பூர் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், அறங்காவலரின் மகன், பூசாரி கீர்த்திவாசன், 40, தலைமையில் ஆறு பேர், மரங்களை கடத்த முயன்றது தெரிந்தது. அவர், டிராக்டர் டிரைவர்கள் மாரிமுத்து, 40, வேலுசாமி, 52, மரம் வெட்டி தொழிலாளிகள் பழனிசாமி, 35, பொன்னுசாமி, 35, துளசி, 25, ஆகியோர் மீது, நான்கு பிரிவில் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர். மரத்தின் மதிப்பு, 3.5 லட்சம் ரூபாய். இரு டிராக்டருடன், கடத்தல் மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X