சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் டிரைவரின் அலட்சியத்தால் அக்கா பலி: போலீசில் தம்பி புகார்

Added : டிச 02, 2019
Share
Advertisement
ஓமலூர்: ஆம்புலன்ஸ் டிரைவரின் அலட்சியத்தால் அக்கா பலியானதாக, அவரது தம்பி, போலீசில் புகாரளித்தார்.தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே, புதூரைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராமலிங்கம், 25, நேற்று முன்தினம், ஓமலூர் போலீசில் அளித்த புகார் மனு: கடந்த, 29 மதியம், 12:30 மணிக்கு, என் மூத்த சகோதரி பத்மாவதி, 35, சித்தப்பா மகன் கோகுல்ராஜ், 25, ஆகியோர், சேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று

ஓமலூர்: ஆம்புலன்ஸ் டிரைவரின் அலட்சியத்தால் அக்கா பலியானதாக, அவரது தம்பி, போலீசில் புகாரளித்தார்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே, புதூரைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராமலிங்கம், 25, நேற்று முன்தினம், ஓமலூர் போலீசில் அளித்த புகார் மனு: கடந்த, 29 மதியம், 12:30 மணிக்கு, என் மூத்த சகோதரி பத்மாவதி, 35, சித்தப்பா மகன் கோகுல்ராஜ், 25, ஆகியோர், சேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ஓமலூர் பைபாஸ் சாலை எதிரே, மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், பத்மாவதி, கோகுல்ராஜ் படுகாயமடைந்து, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பத்மாவதியை மேல்சிகிச்சைக்கு, ஓமலூரிலுள்ள, 'ஸ்பீடு' ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் டிரைவர், நாங்கள் தெரிவித்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், மாமாங்கத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, 'இங்கு தான் சேர்க்க வேண்டும்' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் , 'வண்டியில் பெட்ரோல் இல்லை. வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாது' என தெரிவித்தார். உயிருக்கு போராடிய நிலையில், கடும் வற்புறுத்தலுக்கு பின், ஐந்து ரோட்டிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோது, ஒரு மணி நேரத்துக்கு முன் வந்திருந்தால், உயிரை காப்பாற்றியிருக்கலாம் என, டாக்டர்கள் தெரிவித்தனர். அதனால், அலட்சியமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X