முயல் வேட்டை: இருவருக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முயல் வேட்டை: இருவருக்கு அபராதம்

Added : டிச 02, 2019
Share
செங்கம்: செங்கம் அருகே, முயல் வேட்டையாடிய இருவரிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பிஞ்சூர் காப்புக்காட்டு பகுதியில், வனவர் ராமநாதன் தலைமையிலான வன அதிகாரிகள், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், கோட்டாங்காலை

செங்கம்: செங்கம் அருகே, முயல் வேட்டையாடிய இருவரிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பிஞ்சூர் காப்புக்காட்டு பகுதியில், வனவர் ராமநாதன் தலைமையிலான வன அதிகாரிகள், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், கோட்டாங்காலை சேர்ந்த காந்தி, 40, பழனி, 38, என்பதும், வனப்பகுதியில் முயலை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த முயல், வேட்டையாட பயன்படுத்திய இரும்பு கம்பி, வலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரிடம் இருந்தும், தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X