பொது செய்தி

தமிழ்நாடு

யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி புத்தகம் வெளியீட்டு விழா

Added : டிச 02, 2019
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமார், 101வது ஜெயந்தியில், புத்தக வெளியீட்டு விழா நடந்தது. திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில், நேற்று இரண்டாவது நாளாக, 101வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை சிறப்பு யாகசாலை பூஜை செய்யப்பட்டு, பகவான் லிங்கத்திற்கு மஹா அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, 'தெய்வீக அனுபவங்கள்' மற்றும் 'ஆட்கொண்ட அண்ணல்' ஆகிய இரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் பஜனை, கிருத்திகா பரத்வாஜின் குரு மகிமை குறித்த சங்கீத உபன்யாசம், குரு அர்ச்சனா மகேஷின், 'குரு நந்தி தேவா' நாட்டிய நாடகம் நடந்தது. வெள்ளித்தேரில் பகவானின் உற்சவமூர்த்தி, ஆசிரம கிரிவலப்பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர். ஏற்பாடுகளை, ஆசிரம தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணாசலம், அறங்காவலர்கள் டாக்டர் ராமநாதன், மாதேவகி, மதர்விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, சுவாமிநாதன், குமரன், கணபதி சுப்ரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X