பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு வழியே சென்ற ரயில்கள் மாற்றம்: ஆட்சேபம் தெரிவிப்பதாக ஆலோசனை குழு உறுப்பினர் தகவல்

Added : டிச 02, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு வழியே சென்ற ரயில்களை, மாற்றம் செய்தது குறித்து, ஆட்சேபம் தெரிவிக்கப்படும் என, ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் தெரிவித்தார்.
திருநெல்வேலி-மும்பை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி ஈரோடு வராது. சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியே செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது, நேற்று முதல் இந்த முறை அமலுக்கு வந்தது. ஈரோடு மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் இளங்கவி கூறியதாவது: கால விரயம், கட்டணம் குறையும் என்பதற்காக, ரயில்களை மாற்றியதாக கூறியுள்ளனர். இது ஏற்கத்தக்கதல்ல. ஈரோட்டில் இருந்துதான் அதிக வருவாய், வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்களுக்கு கிடைக்கிறது. வழித்தடம் மாறியதால், ஈரோடு மாவட்ட மக்கள் பாதித்துள்ளனர். விரைவில் மைசூரு-மயிலாடுதுறை ரயிலின் வழித்தடமும் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னையில் வரும், 10ல் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் ரயில் மாற்றத்துக்கு, ஆட்சேபனை தெரிவிக்கப்படும். மாற்றப்பட்ட இரு ரயில்களையும், ஈரோடு வழித்தடத்தில் ஓரிரு மாதத்தில் மீண்டும் இயக்க, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வழித்தடம் மாற்றியதால், 40 கி.மீ., தூரம் குறையும்; ஒரு மணி நேரம் மிச்சமாகும். இன்ஜின் மாற்ற வேண்டியதில்லை. கரூர்-சேலம் ஒன்றரை மணி நேரத்தில் ரயில் சென்று விடும். மேலும் ஈரோட்டில் பிளாட்பார்ம்கள் குறைவு. ரயில்கள் பிளாட்பார்முக்காக நடுக்காட்டில் காத்திருக்க வேண்டியுள்ளது. அவ்வாறான சமயங்களில் பயணிகளின் பொருட்கள் திருட்டு போகிறது. பயணிகள் பாதுகாப்பு, கால விரயத்தை தவிர்ப்பது, கட்டணத்தை குறைத்தல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு, வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X