பொது செய்தி

தமிழ்நாடு

'இன்ஸ்பயர்' விருது போட்டி: தமிழகத்தில் 2,302 பேர் தேர்வு

Added : டிச 02, 2019
Advertisement

சேலம்: தமிழகத்தில், 'இன்ஸ்பயர்' விருது கண்காட்சியில் பங்கேற்க, உதவித்தொகை பெற, 2,302 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்ட, ஆண்டு தோறும் 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படுகிறது. இதன்மூலம் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இதில் தங்கள் கண்டுபிடிப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பம், கடந்த மாதம் வரை பெறப்பட்டது. மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்பு குறித்த விபரங்களுடன் விண்ணப்பித்தனர். அவர்களில், 2,302 பேர் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலிருந்து, 88 பேர் இடம் பிடித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X