பொது செய்தி

தமிழ்நாடு

பெரியார் பல்கலைக்கு பல லட்சம் ரூபாய் நிதியிழப்பு: துணைவேந்தர் மீது உயர்கல்வி செயலருக்கு புகார்

Added : டிச 02, 2019
Advertisement

ஓமலூர்: பெரியார் பல்கலைக்கு, துணைவேந்தர் லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வித்துறை செயலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
சேலம், 'பெரியார் பல்கலை பாதுகாப்பு குழு' சார்பில், உயர்கல்வித்துறை முதன்மை செயலருக்கு, கடந்த, 27ல் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: துணைவேந்தர் குழந்தைவேல், பல்கலை விதிமீறல், முறைகேடுக்கு காரணமாக செயல்படுகிறார். இதனால், பல்கலை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்க மறுக்கிறார். மாறாக, சங்க பணியில் ஈடுபட்ட நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து, 58 பேருக்கு குறிப்பாணை (மெமோ) வழங்கியுள்ளார். உயர் கல்வி தகுதியின்றி, பணி நிரந்தரம் செய்யப்பட்ட தினக்கூலி பணியாளர்கள் ஐந்து பேருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி, பதவி உயர்வு அளித்துள்ளார். இதன்மூலம், பல்கலைக்கு லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக, காலியாகவுள்ள பதிவாளர், தேர்வாணையர் பணியிடங்களை நிரப்ப மறுத்து வருகிறார். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X