பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : டிச 02, 2019
Share
Advertisement
சேதமான சாலை; சீரமைத்தால் நலம்: தர்மபுரி நகராட்சி, 29வது வார்டு கமலா லட்சுமி காலனியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில், எட்டு ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில், தற்போது பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு தோண்டிய பள்ளமும், முறையாக மூடவில்லை.

சேதமான சாலை; சீரமைத்தால் நலம்: தர்மபுரி நகராட்சி, 29வது வார்டு கமலா லட்சுமி காலனியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில், எட்டு ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில், தற்போது பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு தோண்டிய பள்ளமும், முறையாக மூடவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி: நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகம் முன், மளிகை, பூக்கடை, பேன்சி உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு சாக்கடை கால்வாய் இல்லை. இதனால், இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பாய்கிறது. கழிவுநீர் சாலை முழுவதும் சென்று, துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், அவதிப்படுகின்றனர். இங்கு, கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

தண்ணீர் தொட்டி இருந்தும் வீண்: தர்மபுரி அடுத்த, உங்குரானஹள்ளி பஞ்., எட்டிமரத்துப்பட்டியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இரண்டு மாதத்துக்கு முன், இதன் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக இதில் தண்ணீர் வருவதில்லை. இதை சீரமைத்து, மீண்டும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X