கடத்தூர்: கடத்தூர் அருகே, புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்தார். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த டி.அய்யம்பட்டியில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, ஒரு கோடியே, 36 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. இந்நிலையில், புதிய பள்ளி கட்டடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று குத்து விளக்கேற்றி, திறந்து வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, டி.ஆர்.ஓ., ரஹமத்துல்லா கான் உட்பட, பலர் பங்கேற்றனர்.