சாலையோர கடைகளை அகற்ற மக்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர கடைகளை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

Added : டிச 02, 2019

கம்பைநல்லூர்: கம்பைநல்லூரில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் சந்தை நடக்கிறது. டவுன் பஞ்., சார்பில், சந்தைக்கு ஒதுக்கிய இடங்களில் கடை வைக்காமல், சாலையை ஆக்கிரமித்து, கடைகள் வைக்கப்படுகின்றன. இதனால், அரூர்- கிருஷ்ணகிரி சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி, பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X