பொது செய்தி

தமிழ்நாடு

செயல்திட்ட அறிக்கை சமர்ப்பித்தல்: போட்டியில் மாணவர்கள் பங்கேற்பு

Added : டிச 02, 2019
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அளவிலான செயல் திட்டங்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டி நடந்தது. இதில், நான்கு அரசு பள்ளிகளை சேர்ந்த, 35 மாணவ, மாணவியர் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான 'ஸ்கோப்' எனும் மாவட்ட அளவிலான செயல்திட்டங்கள் அறிக்கை சமர்ப்பித்தல் போட்டி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கவேலு, தலைமை வகித்தார். ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள, எட்டு ஒன்றியங்களிலும், ஒன்றிய அளவிலான அறிக்கை சமர்ப்பித்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், மாவட்ட போட்டியில் பங்கேற்றனர். அதன்படி, கணிதம், வணிகவியல், தாவரவியல் என மூன்று பாடங்களில், பாப்பிரெட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இயற்பியல் மற்றும் விலங்கியலில் அவ்வையார் அரசு பெண்கள் பள்ளி, வேதியியலில் பேகாரஹள்ளி அரசுப்பள்ளி, பொருளாதாரத்தில் காரிமங்கலம் பெண்கள் பள்ளி என, ஏழு பள்ளிகளை சேர்ந்த, 35 மாணவ, மாணவியர் முதல் பரிசை பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து, முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை, சி.இ.ஓ., முத்துகிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள் பொன்முடி, பாலசுப்ரமணி, நடுவர்களாக பணியாற்றிய பேராசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர். இதற்கான, மாநில போட்டி சேலத்தில், நாளை நடக்க உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X