பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தொடக்கம்

Added : டிச 02, 2019
Advertisement

பென்னாகரம்: ஏரியூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திலிருந்து, 10 ஊராட்சிகளை உள்ளடக்கி, ஏரியூர் ஒன்றியமாக உருவாக்கப்பட்டும் என, 2013 ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இதுவரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. ஏரியூர் சுற்றியுள்ள நெருப்பூர், நாகமரை, செல்லமுடி, பத்ரஅள்ளி, பூச்சூர், அஜ்ஜனஅள்ளி, சிகரல அள்ளி, ஏமனூர் என வனத்துறையை ஒட்டிய கிராமப் பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். விவசாய பொருட்களை வெளியூர்களுக்கு எடுத்து செல்லவும், போக்குவரத்துக்கும் பென்னாகரம், தர்மபுரி, சேலம், மேச்சேரி, மேட்டூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல ஏரியூரை நம்பியுள்ளனர். இங்கு, 20க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், வெயில், மழையில் நிற்க இடமில்லமால் அவதிப்பட்டு வந்தனர். ஏரியூரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ஐந்து மாதங்களுக்கு முன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஏரியூர் சந்தை திடலில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க பூமி பூஜை செய்தார்.தற்போது பஸ் ஸ்டாண்ட் அமைக்க, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மேம்பாட்டு நிதி இரண்டு கோடியே, 80 லட்சமும், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் கடைகள் உட்பட, 60 கடைகள் கொண்ட இரண்டு அடுக்கு வணிக வளாகம் அமைக்க, ஒன்றிய பொது நிதியிலிருந்து, 70 லட்சமும், தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, 30 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு, பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X