பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : டிச 02, 2019
Share
Advertisement
தடுப்புச்சுவரின்றி விபத்து அபாயம்: கிருஷ்ணகிரியிலிருந்து கணவாய்ப்பட்டி வழியாக பாலேகுளி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ளது பாலேகுளி ஏரி. இதன் கரையில் உள்ள சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாணவ, மாணவியர் சைக்கிளில் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த ஏரிக்கரை சாலைக்கு தடுப்புச்சுவர் இல்லை. இதனால், இரவில் செல்லும் வாகனங்கள் தடுமாறி ஏரியில் விழும் அபாயம்

தடுப்புச்சுவரின்றி விபத்து அபாயம்: கிருஷ்ணகிரியிலிருந்து கணவாய்ப்பட்டி வழியாக பாலேகுளி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ளது பாலேகுளி ஏரி. இதன் கரையில் உள்ள சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாணவ, மாணவியர் சைக்கிளில் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த ஏரிக்கரை சாலைக்கு தடுப்புச்சுவர் இல்லை. இதனால், இரவில் செல்லும் வாகனங்கள் தடுமாறி ஏரியில் விழும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் ஏரி சாலைக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
பாதியில் நிறுத்திய சாலை பணிகள்: வேப்பனஹள்ளி ஒன்றியம், கடவரப்பள்ளி, காரகுப்பம், யானைக்கால் தொட்டி பகுதியில் சாலைகள் அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி கடந்த ஜன.,யில் இப்பணிகள் துவங்கப்பட்டன. பாதி மட்டுமே முடிந்த நிலையில், மீதிப்பணிகள் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பத்து மாதங்களை கடந்தும் இப்பணிகள் நடக்காததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X