பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி தூர்வாரும் பணி துவக்கம்

Added : டிச 02, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர் அடுத்த சென்னத்தூர் பகுதியில், 46 ஏக்கர் பரப்பளவில் வரதையன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை, மைலான் என்ற தனியார் நிறுவனம், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வார அனுமதி பெற்றுள்ளது. இப்பணியை, மாவட்ட கலெக்டர் பிரபாகர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, சென்னத்தூர் ஏரிக்கரையில், ஜல்சக்தி அபியான் மியாவாக்கி அடர் காடுகள் வளர்ப்பு திட்டத்தில், 1,000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியை, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்களிப்புடன் துவக்கி வைத்தார். ஓசூர் நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன், தன்னார்வலர்கள் லட்சுமணன், தாமஸ், ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X