பொது செய்தி

தமிழ்நாடு

துவரை தொகுப்பு சாகுபடி: வேளாண் அதிகாரி விளக்கம்

Added : டிச 02, 2019
Share
Advertisement
கிருஷ்ணகிரி: துவரை தொகுப்பு சாகுபடி குறித்து வேளாண் உதவி இயக்குனர் விளக்கம் அளித்தார். கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளியில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள் சாகுபடி குறித்து, வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) கண்ணன் விவசாயிகளிடம் விளக்கம் அளித்து கூறியதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில், சோளம், கம்பு, ராகி, குதிரை வாலி போன்ற சிறு தானிய

கிருஷ்ணகிரி: துவரை தொகுப்பு சாகுபடி குறித்து வேளாண் உதவி இயக்குனர் விளக்கம் அளித்தார். கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளியில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள் சாகுபடி குறித்து, வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) கண்ணன் விவசாயிகளிடம் விளக்கம் அளித்து கூறியதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில், சோளம், கம்பு, ராகி, குதிரை வாலி போன்ற சிறு தானிய பயிர்கள், 5,100 ஏக்கரிலும், துவரை, உளுந்து, காராமணி போன்ற பயறுவகை பயிர்கள், 6,700 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில், பயறு வகைப்பயிர்கள் சாகுபடியை ஊக்கப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், துவரை தொகுப்பு செயல் விளக்கத்திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் துவரை சாகுபடியில், விதைகளை டிரைக்கோ டெர்மா விரிடி மற்றும் ரைசோபியம் உயிர்க்காரணிகள் கொண்ட விதை நேர்த்தி செய்தல், வரிசையில் நடவு செய்தல், இரண்டு சதவீதம் டி.ஏ.பி., கரைசலை பூக்கும் பருவத்தில் தெளித்தல், காய்ப்புழு போன்ற பூச்சிகள் மேலாண்மை, துவரையில் நுனி கிள்ளுதல் போன்ற தொழில் நுட்பங்களை சரியான முறையில் பயன்படுத்தி, விவசாயிகள் கூடுதல் விளைச்சல் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர் பிரியா, உதவி வேளாண் அலுவலர் விஜயன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X