தமிழ் கலாச்சார சங்கமும், ராஜ் டிவியும் இணைந்து மெகா இசை விழா சீசன் 3 நிகழ்ச்சியினை சென்னை காமராஜர் அரங்கில் துவங்கியது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு இசை விழாவினை துவக்கிவைத்தார். உடன் ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ், அமைச்சர் பாண்டியராஜன், சுங்கத்துறை மாநில முதன்மை ஆணையர் சிவன் கண்ணன், விழாவில் வெளிநாடு வாழ் இந்தியர் விருதினை பெற்ற ஜெமினி குழுமத்தின் தலைவர் சுதாகர் ராவ், இசைச் செம்மல் விருதினை பெற்ற பாபநாசம் அசோக் ரமணி மற்றும் பழம்பெரும் நடிகை விருதினை பெற்ற கலைமாமணி சச்சு.