பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல அளவில் தபால்துறை குறைத்தீர் கூட்டம்

Added : டிச 02, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கோயம்புத்தூரில் வரும் டிச., 10ல் மண்டல அளவிலான தபால்துறை சார்ந்த குறைத்தீர் கூட்டம் நடக்கிறது. இது குறித்து கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் முனி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள, மேற்கு மண்டல அஞ்சல் அலுவலகத்தில், வரும் டிச., 10 காலை, 11:00 மணிக்கு மண்டல அளவிலான தபால்துறை சார்ந்த குறைதீர் கூட்டம் நடக்கிறது. எனவே, அஞ்சல் வாடிக்கையாளர்கள், தங்களது புகார்களை 'Dak Adalat Case' என தபால் உறையின் மீது எழுதி வரும் டிச., 5க்குள் 'Assistant Director (Mails Estt.,) O/o. The PMG, Western Region, Coimbatore - 641 002' என்ற விலாசத்திற்கு சென்று சேரும்படி அனுப்ப வேண்டும். அனுப்பும் புகார்களில், தபால் அனுப்பிய நாள், அனுப்புனர் மற்றும் பெறுனர் விலாசம் குறிப்பிட வேண்டும். பதிவுத்தபால், எம்.ஓ., வி.பி., மற்றும் விரைவுத்தபால் ஆகியவைகளுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிட வேண்டும். அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு, கணக்கு எண், பாலிசி எண், கணக்கு வைத்திருப்பர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் விலாசம், அஞ்சல் அலுவலகத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விபரம் போன்றவை குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X