பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா கடத்தல் சம்பவத்தில் 4 போலீசார் 'சஸ்பெண்ட்'

Added : டிச 02, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 23 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தலுக்கு, துணை போன நான்கு போலீசாரை, எஸ்.பி., 'சஸ்பெண்ட்' செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, மினி வேன் ஒன்று கிருஷ்ணகிரி நோக்கி கடந்த, 29ல் இரவு வந்தது. குருபரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குருபரப்பள்ளி எஸ்.எஸ்.ஐ., சிவக்குமார், 52, ஏட்டுகள் சரவணன், 45, முருகன், 42 ஆகியோர் வேனை சோதனை செய்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து, 23 லட்ச ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரை சேர்ந்த டிரைவர் சுந்தரமூர்த்தி, 30, என்பவரிடம் பேரம் பேசி, 1.50 லட்சம் ரூபாயை மூன்று போலீசாரும் லஞ்சமாக பெற்றுக்கொண்டு, மறுநாள் காலை குட்கா பொருட்களுடன் மினி வேனை விடுவித்தனர். சேலம் நோக்கி சென்ற மினி வேனை, கிருஷ்ணகிரி-மோட்டூர் சந்திப்பில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான போலீசார் பிடித்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து, விழுப்புரத்துக்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றதும், இதற்காக குருபரப்பள்ளி போலீசாருக்கு, 1.50 லட்சம் ரூபாயை டிரைவர் சுந்தரமூர்த்தி லஞ்சமாக கொடுத்ததும் தெரிந்தது. இது குறித்து எஸ்.பி.,பண்டிகங்காதருக்கு தகவல் தெரிவித்த போலீசார், வேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். போலீசார் லஞ்சம் வாங்கியது குறித்து, எஸ்.பி., விசாரித்துள்ளார். பின், எஸ்.எஸ்.ஐ., சிவக்குமார், ஏட்டுகள் சரவணன், முருகன் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். மேலும், குட்கா கடத்தி வந்ததை, போலீசார் பிடித்தது குறித்து உரிய நேரத்தில் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத, கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு உதயகுமார், 38, என்பவரையும், எஸ்.பி., 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X