பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல தொழிற்பழகுனர் பயிற்சி: பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

Added : டிச 02, 2019
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட திறன் பயற்சி உதவி இயக்குனர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பிரிவு சார்பில், சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும், 6 காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை, மண்டல அளவிலான தொழிற்பழகுனர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் நடக்கிறது. இதில், அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தொழிற்பழகுனர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ., பயிற்சி பெற்றவர்கள், 8 மற்றும் பத்தாம் வகுப்பு கல்வி தகுதி மற்றும் அதற்கு கூடுதல் கல்வி தகுதியுடையவர்களை தேர்வு செய்ய உள்ளன. எனவே, அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,யில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, இறுதியாண்டு தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருக்கும் அனைத்த மாணவர்களும், தொழிற்பழகுனர் பயிற்சியில் சேர்ந்து, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் (என்.ஏ.சி.,) பெறலாம். ஐ.டி.ஐ.,யில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத, 8 ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உடையவர்கள் பிரெஷர் அப்ரண்டீசாக நேரடியாக தொழிற்சாலைகளில் சேர்ந்து, 3 முதல் 6 மாதம் வரை அடிப்படை பயிற்சி, ஒன்று முதல், இரு ஆண்டுகள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறலாம். பி.எம்.கே.வி.ஒய்., அல்லது எம்.இ.எஸ்., போன்ற திட்டத்தின் மூலம், 500 மணி நேர பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்கள், தொழிற்சாலைகளில் நேரடியாக தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறலாம். தொழிற்பழகுனர் (அப்ரன்டீஸ்) பயிற்சிக்கு மாத உதவித்தொகை, 8,500 முதல், 16 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு, மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வயது வரம்பில் ஓராண்டு சலுகை உள்ளது. மேலும் உலகளவில் தனியார் நிறுவனங்களில், வேலை பெறுவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழாகும். எனவே இதுவரை தொழிற்பழகுனர் பயிற்சி பெறாதவர்கள், முகாம் நடக்கும் வரும், 6 ல், அசல் கல்வி சான்றிதழுடன் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வரலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X