சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணம் செய்ய சிறுமி கடத்தல்

Added : டிச 02, 2019
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை ரஹமத் காலனியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்துள்ள அவர், மேற்கொண்டு கல்வி கற்காமல் வீட்டில் இருந்தார்; இவரை, ராயக்கோட்டை காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார், 19, காதலித்து வந்துள்ளார். கடந்த, 18ல், வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி, மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்காததால், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். விசாரணையில், திருமணம் செய்யும் நோக்கில், சிறுமியை, குமார் கடத்தி சென்றது தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X