சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலி: தாய், மகள் படுகாயம்

Added : டிச 02, 2019
Advertisement

ஓசூர்: ஓசூரில் நடந்த வெவ்வேறு விபத்தில், பெண் உட்பட மூன்று பேர் பலியாகினர். தாய், மகள் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில், 35 முதல், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்து சென்றார். ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயம் அடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர். ஓசூர் அடுத்த, சிக்காரிபாளையத்தை சேர்ந்தவர் காந்தராஜ், 24. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, பேஷன்புரோ பைக்கில் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அலசநத்தம் சாலையில் உள்ள ஜெய்நகர் அருகே, சாலையில் நடந்து சென்ற, கீதா, 36, மற்றும் அவரது, 10 வயது மகள் மீது பைக் மோதியது. இதில், காந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கீதா மற்றும் அவரது மகள், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர். ஓசூர், பத்தலப்பள்ளி மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர், ராஜேந்திரன் மனைவி மஞ்சுளா, 28. இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, பத்தலப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே, கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த சான்ரோ கார், மஞ்சுளா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X