சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் ஒற்றை யானை; பீதியடைந்த வாகன ஓட்டிகள்

Added : டிச 02, 2019
Advertisement

ஓசூர்: தேசிய நெடுஞ்சாலையோரம் நின்ற ஒற்றை ஆண் யானையால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி வனப்பகுதியையொட்டி, தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை அவ்வப்போது யானைகள் கடந்து, போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு செல்வதும், அங்கிருந்து பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளன. பேரண்டப்பள்ளி வனப்பகுதியில், தற்போது ஒற்றை ஆண் யானை முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, வனப்பகுதியில் இருந்து பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம் வந்த யானை, சாலையை கடக்க முயற்சி செய்தது. வாகனங்கள் தொடர்ந்து சென்றதால், யானை சாலையோரம் நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்ற யானை, மீண்டும் பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதற்கிடையே, ஓசூர், சானமாவு காப்புக்காட்டில், 30க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று இரண்டாவது நாளாக முகாமிட்டிருந்ததால் பீர்ஜேப்பள்ளி, சானமாவு, ஆழியாளம், ராமாபுரம், போடூர், பாத்தக்கோட்டா கிராம மக்கள், வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X