பொது செய்தி

தமிழ்நாடு

2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்குவை கண்டுபிடிப்பு

Added : டிச 02, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: நலகுண்டலப்பள்ளியில், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்குவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, அரசு அருங்காட்சியகம் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், நலகுண்டலப்பள்ளியில், பொறியியல் பட்டதாரி அன்பழகன், பள்ளி மாணவர் திவாகர் ஆகியோர் தகவல்படி, வரலாற்று குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்கு பின், கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: நலகுண்டலப்பள்ளி மலை உச்சியில் காணப்படும் கற்குவியல், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறைகளை விளக்கும், பெருங்கற்கால நினைவு சின்னங்களாகும். பெருங்கற்கால கற்குவை வட்ட வடிவில் இரண்டும், சதுர வடிவில் இரண்டும், எண்கோண வடிவில் ஒன்றும் காணப்படுகிறது. வட்ட வடிவ கற்குவை, ஆறு அடி உயரம், 10 அடி சுற்றளவு கொண்டதாக உள்ளது. அக்காலத்தில் இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும், பல்வேறு வகையான நினைவு கட்டமைப்புகளில், இந்த கற்குவையும் ஒன்று. கற்களை உடைக்க நவீன கருவிகள் இல்லாத அக்காலத்தில், கிடைத்த மற்றும் உடைந்த கற்களை கொண்டு சரியான அளவில் கற்களை அமைத்துள்ளனர். மலைவாழ் மக்கள், இவற்றை குறிப்பிட்ட நாட்களில் வழிபட்டு வந்ததாக தகவல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று குழுவினர் ரவி, மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X