பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு சீரான நீர்வரத்து: தென்பெண்ணையில் 240 கன அடி திறப்பு

Added : டிச 02, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த மூன்று நாட்களாக சீரான நீர்வரத்து உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 240 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 29ல் நீர்வரத்து வினாடிக்கு, 328 கன அடியாக இருந்தது. அணையில் போதிய நீர்இருப்பால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 240 கன அடி, வலது, இடது கால்வாய் பாசனத்துக்கு, 88 கன அடி என மொத்தம், 328 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை அணைக்கு தொடர்ந்து, 328 கன அடி நீர்வரத்து இருந்தது. அதனால் கடந்த, 29ல் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட அதேயளவு தண்ணீர், தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்பிடிப்பு பகுதியில், 2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. வரும் நாட்களில், நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X