பொது செய்தி

தமிழ்நாடு

உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு சாரண பயிற்சி

Added : டிச 02, 2019
Advertisement

கிருஷ்ணராயபுரம்: குளித்தலை கல்வி மாவட்ட, பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில், மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் இயங்கும் தரகம்பட்டி கே.ஜி.பி.வி., உண்டு உறைவிட பள்ளி மாணவியருக்கு மூன்று நாள் சாரண பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், சாரண இயக்கத்தினால் மாணவர்கள் ஒழுக்கம் மேம்படுவதுடன், தலைமை பண்பு, ஆளுமைத்திறன் வளர்ச்சி அடைகிறது என விளக்கமளிக்கப்பட்டது. பயிற்சியில், பேடன் பவலார் சாரண பாடல்கள், சட்டம் வாக்குறுதி, குறிக்கோள் அணிமுறை, விளையாட்டுகள், ஆக்கல் கலை முதலுதவி மதிப்பீடு, பாசறை வாழ்க்கை, குழு மனப்பான்மை, ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட அமைப்பு ஆணையர் சுந்தர சுப்பிரமணியன், பயிற்சி ஆணையர் புரு?ஷாத்தமன், கரூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர். 103 சாரண மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X