பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள், கல்லூரிகளில் தோட்டக்கலை மன்றம்: கலெக்டர்

Added : டிச 02, 2019
Advertisement

கரூர்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், தோட்டக்கலை மன்றம் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழையளவு, 652.20 மி.மீ.,. நடப்பு நவம்பர் முடிய கிடைக்க வேண்டிய சராசரி மழையான, 604.33 மி.மீ.,க்கு, இதுவரை, 472.58 மி.மீ., மழை மட்டுமே கிடைத்துள்ளது. உணவு தானிய உற்பத்தி இலக்கை, சாதனையாக அடைந்திட ஏதுவாக அனைத்து வேளாண் விரிவாக்க மையத்திலும், சான்று பெற்ற நெல் ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை மூலம், குறைந்த தண்ணீரில் அதிக பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, நுண்ணீர் பாசனக் கருவிகள் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தோட்டக்கலை பயிர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தோட்டக்கலை மன்றம் இந்தாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் மரங்கள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில், விதைப்பந்துகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பழச்செடிகள், காய்கறி விதைகள் மற்றும் நுண்ணீர் பாசனக் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள், அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X