பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் 400 பயனாளிகளுக்கு இலவச மாடுகள்: அமைச்சர் தகவல்

Added : டிச 02, 2019
Advertisement

கரூர்: கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம் மணவாடியில், 163 பயனாளிகள், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கம்மநல்லூரில், 50 பயனாளிகளுக்கு, இலவச கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: கிராமப்புற பெண்களுக்கு இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஒரு பயனாளிக்கு, 38 ஆயிரத்து, 500 ரூபாய் மதிப்பில், 400 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. இதுவரை, 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 50 பயனாளிகளுக்கு வழங்க கறவைமாடுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதே போல், இந்தாண்டு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில், 2,476 பயனாளிகளுக்கு, 3.16 கோடி ரூபாய் மதிப்பில் வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டு இதுவரை, 1,511 பயனாளிகளுக்கு, 2.67 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டர் அன்பழகன், எம்.எல்.ஏ., கீதா, சப் - கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் காளியப்பன், இயக்குனர் ஆலம்தங்கராஜ், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ், ஜெகதீசன், தமிழரசன், கரூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X